மதுவிற்ற 3 பேர் கைது

ஈரோடு,ஜன.8:பவானி அடுத்துள்ள ஊராட்சிக்கோட்டை மலையடிவாரத்தில் மது விற்பனை நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்தியதில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ஊராட்சிக்கோட்டை, ஜீவாநகர் மாதையன்(63) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதே போல பவானிசாகர் போலீசார் நடத்திய சோதனையில் மது விற்றதாக கொத்தமங்கலம், நெரிஞ்சிபேட்டையை சேர்ந்த ராஜூ(35) கைது செய்யப்பட்டார். கூகலூர், பொன்னாச்சிபுதூரை சேர்ந்த மாரிசாமி(46) என்பவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததையடுத்து கோபி போலீசார் கைது செய்தனர்.

Related Stories: