உழவர் சந்தைகள் நாளை செயல்படாது

ஈரோடு,ஜன.8: ஈரோடு மாவட்டத்தில் உழவர் சந்தைகள் நாளை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாள் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாளை (9ம் தேதி) முழு நாள் ஊரடங்கை முன்னிட்டு ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், சத்தியமங்கலம்,  பெருந்துறை, கோபிச்செட்டிபாளையம் ஆகிய 5 இடங்களில் உள்ள உழவர் சந்தைகள் நாளை செயல்படாது. உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து மஞ்சள் பைகளில் காய்கறிகள் வாங்கிச் செல்லுமாறு வேளாண் வணிக துணை இயக்குனர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Related Stories: