தீபாவளி பண்டு, ஏலச்சீட்டு நடத்தி ரூ.4.5 கோடி மோசடி: பெண் உள்பட குடும்பத்தினர் தலைமறைவு

ஆவடி: சென்னையை அடுத்த செங்குன்றம், ஆட்டந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 50க்கு மேற்பட்டோர் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டனர். அவர்கள் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: செங்குன்றம் அருகே ஆட்டம் தாங்கல், பாலமுருகன் நகரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் செல்வி (45). இவர், கடந்த 15ஆண்டுகளுக்களாக யூகே சிட் பண்டு என்ற பெயரில் நடத்தி வந்துள்ளார். இவருக்கு குடும்பத்தினரும் துணையாக இருந்துள்ளனர். மேலும், பஞ்சவர்ணம் செல்வி ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்டுக்கு  பணம் செலுத்தியவர்களுக்கு பல ஆண்டாக பணம், பொருட்களை ஒழுங்காக கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு முதல்  பஞ்சவர்ணம் செல்வி, ஏலச்சீட்டு தீபாவளி பண்டு கட்டியிருப்பவர்களுக்கு முறையாக பணத்தையும், பொருட்களை தரவில்லை. மேலும், அவர் அப்பகுதியில் பலரிடம் கடனாக ரூ.3 லட்சம் முதல் பல லட்சம் வரை பெற்றுள்ளார். இவ்வாறு, கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றியுள்ளார். இவ்வாறு, பஞ்சவர்ணம் செல்வி 100க்கும் மேற்பட்டோரிடம் ரூ.4.5 கோடி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பணத்தை இழந்தவர்கள் கேட்டதவற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பஞ்சவர்ணம் செல்வி  குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார்.

 எனவே, போலீசார் பண மோசடியில் ஈடுபட்ட பஞ்சவர்ணம் செல்வி மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் புகாரில் கூறியுள்ளனர். இதனை அடுத்து, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் புகாரை சோழவரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சோழவரம் போலீசார் புகார் மனு குறித்து விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் பகுதியில் தீபாவளி பண்டு, ஏலச்சீட்டு நடத்தியும், கடன் வாங்கியும் ரூ.4.5கோடி வரை பெண், குடும்பத்தினர் பண மோசடி செய்தது உறுதி செயப்பட்டது. பஞ்சவர்ணம் செல்வி குடும்பத்தினரை தேடுகின்றனர். 

Related Stories: