பழைய ஜெயங்கொண்டத்தில் வேளாண். தொழில்நுட்ப விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

கிருஷ்ணராயபுரம், ஜன. 8: கிருஷ்ணராயபுரம் அருகே பழையஜெயங்கொண்டம் பேரூராட்சி சமுதாய கூட வளாகத்தில் வேளாண் உழவர் நலத் துறையின் கிருஷ்ணராயபுரம் வட்டாரம் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை, மானாவாரி நில வேளாண்மை குறித்த திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண் அலுவலர் சரண்யா தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் அரசின் வேளாண் சம்பந்தமான திட்டங்கள் கலை நிகழ்ச்சி மூலமாக அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: