கொரோனா பரவல் தடுக்க நடவடிக்கை கரூரில் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல் வழிபாட்டு தலங்கள் மூடல்: வெறிச்சோடிய சாலைகள்

கரூர், ஜன. 8: தமிழக அரசு கடந்த 6ம்தேதி கொரோனா கட்டுப்படுத்த மீண்டும் இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொது ஊரடங்கு அறிவித்தது. அரசின் அறிவிப்பை செயல்படுத்துவதில் கரூர் மாவட்ட காவல் துறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு பகுதியில் ஐந்து குழுக்களாகப் பிரித்து தனித் தனி போலீஸ் ஆய்வாளர்கள் பணிக்கு அமைத்து கொ ேரானா கட்டுப்படுத்த அரசின் செயல் முறைகளை மக்கள் கடைப்பிடிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கரூர் டவுன் பகுதியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு முகக் கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதமும் முதல் முறை என்றால் எச்சரித்தும் இனி வெளியில் வரும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.மேலும் கரூர் ஜவார் பஜார் கோவை ரோடு சர்ச் கார்னர் வெங்கமேடு பாலம் அமரராகி பாலம் ஆகிய பகுதிகளில் போலீசார் தனியாக குழு அமைத்து சிறப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து இரவு நேரமும் பரபரப்பாக காணப்படும் கரூர் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. கரூர் ஜவுளி ஏற்றுமதி செய்யும் முக்கிய நகரமாகும் எனவே இரவு நேரங்களில் டெக்ஸ்டைல் துறையில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் இரவு நேர பணியை முடித்துக்கொண்டு காலை 6 மணி வரை எப்போதும் கரூர் ஜவஹர் பஜார் கோவை ரோடு செங்குந்தபுரம் காமராஜர்புரம் ராமகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகள் மக்கள் நடமாட்டம் ஆக இருக்கும் ஆனால் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு என்பதால் கரூர் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் நேற்று முதல் நாளை வரை வழிபாட்டு தலங்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளதால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: