இரவு நேர ஊரடங்கில் வெறிச்சோடிய தேரடி பஜார் பொங்கல் பரிசு தொகுப்பால் மக்கள் மகிழ்ச்சி இல்லத்தரசிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து உற்சாகம்

திருச்சி, ஜன.7: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிடும் வகையில், அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்வாழ். இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள். கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, உப்பு, ரவை, கோதுமைமாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் ஆகிய மளிகைப் பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய தொகுப்பு மற்றும் கரும்பும் சேர்த்து 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடியில் வழங்கப்படும் என்று அறிவித்து, அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை தமிழக மக்களுக்கு வழங்கிடும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 4ம் தேதி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தனர். மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள 8,26,259 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 905 இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் 1,225 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்ற திருச்சி பீமநகர் ரெட்டித் தெருவைச் சேர்ந்த சாவித்திரி(65) கூறுகையில், எனது மகன் தச்சு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கி வரும் முதல்வர் எங்களைப் போன்ற ஏழை, எளிய தினசரி உழைக்கும் மக்களும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட, பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வருக்கு எனது குடும்பத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். திருச்சி தென்னூர் மூலகொல்லைத் தெருவைச் சேர்ந்த செந்தாமரை(38) கூறுகையில், முதல்வர் வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினால் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளோம். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இதன் மூலம் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுவோம். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எங்கள் நன்றி என்றார். பொங்கல் பரிசுத் தொகுப்பு மக்களுக்கு வழங்குவதன் மூலம் மக்கள் மிகுந்த மகிழ்வும், உற்சாகமும் கொண்டு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றனர்.

Related Stories: