ஓட்டல், தியேட்டர்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி

கடலூர், ஜன. 7:       கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஓட்டல் மற்றும் தியேட்டர்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று கடலூர் பகுதி ஓட்டல்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஓட்டலுக்கு வருபவர்கள் கிருமிநாசினி மூலம் கையை சுத்தப்படுத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் கடலூர் பகுதியில் உள்ள சினிமா தியேட்டர்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.    தியேட்டர் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திய பிறகுதான் வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதேபோல ஒவ்வொரு காட்சி முடிந்த பிறகும் தியேட்டர் முழுதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் பார்வையாளர்கள் ஒரு இருக்கை விட்டு ஒரு இருக்கையில் அமரவும், கட்டாயம் முகக்கவசம் அணிந்து படம் பார்க்கவும் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: