வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு

நெய்வேலி, ஜன. 7:  நெய்வேலி சட்டமன்றத் தொகுதி குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து, இந்திரா நகர், கீழுர் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியபனவர் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து கிராமங்களில் நேரடியாக ஆய்வு செய்தார். இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள், பிரதமர் வீடு கட்டும் திட்டம், பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள், கிடப்பில் கிடக்கும் அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து கூடுதல் ஆட்சியர் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், சுப்பிரமணியன், உதவி பொறியாளர்கள் ரத்தினகுமார், தமின்முனிஷா, வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத்தலைவர் சடையப்பன், இந்திராநகர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் உமா ராமதாஸ், தாவக முன்னாள் கவுன்சிலர் சந்தோஷ்குமார், ஊராட்சி செயலாளர்கள் எழிலரசன், கார்த்திகேயன், வார்டு உறுப்பினர்கள் ராஜபூபதி, நளினி சண்முகம், இளையராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: