குண்டாசில் 3 பேர் கைது

திருச்சி, ஜன.6: திருச்சி மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றசம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் போலீசாருக்கு அறிவுரை வழங்கி உள்ளார். கடந்த டிச.17ம் தேதி திருச்சி காவிரி நகரில் நடந்து சென்ற ஒருவரை வழிமறித்து கத்தியை காட்டி பணத்தை பறித்ததாக தங்கமுத்து(27) என்பவரை எ.புதூர் போலீசார் கைது செய்தனர். கடந்த டிச.5ம் தேதி பாரதிதாசன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் செல்போன் பறித்ததாக ஷேக்தாவுத்(33), மன்சூர்அலி(28) ஆகியோரை கன்டோன்மென்ட் போலீசார் கைது செய்தனர். சிறையில் உள்ள இந்த மூவர் மீதும் பல்ேவறு வழக்குகள் நிலுவையில் இருந்தததை அடுத்து, இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன் பேரில் மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: