மகளிர் கைப்பந்து போட்டி இந்திராகாந்தி கல்லூரி முதலிடம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான கைப்பந்து மகளிர் போட்டியின் நிறைவு விழாவில் இந்திராகாந்தி கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலிடம் பெற்ற இந்திராகாந்தி கல்லூரிக்கு கோப்பையை வழங்கினார். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி துறை செயலர் மற்றும் தலைவர் கலைதாசன், கல்லூரி முதல்வர் வித்யாலட்சுமி, மகளிர் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் பங்கேற்றனர்.

இறுதி பட்டியல் வெளியீடு

திருச்சி மாவட்டத்தில் 23.46 லட்சம் வாக்காளர்கள்

திருச்சி, ஜன.6: திருச்சி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 23 லட்சத்து 46 ஆயிரத்து 36 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கூடுதலாக 3,917 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 1.1.2022ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 1.11.2021 முதல் 30.11.2021 வரை நடந்தது. தற்போது பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் சிவராசு வெளியிட்டார்.

அப்போது கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் 1.11.2021 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டிலியலில் 23 லட்சத்து 42 ஆயிரத்து 119 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது கூடுதலாக விண்ணப்பம் பெற்றதில் 3,917 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி தற்போது திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 11,35,752 ஆண்கள், 12,10,000 பெண்கள், 284 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 23 லட்சத்து 46 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். ராணுவத்தில் பணிபுரியும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 1,410 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களது பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் கடைசி பாகமாக சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தில் 78,956 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 76,723 ஏற்கப்பட்டன. 2,233 தள்ளுபடி செய்யப்பட்டன.

புதிய வாக்காளர் சேர்க்க 35,420 பேரிடம் படிவம் பெறப்பட்டதில் 34,677 விண்ணப்பங்கள் சேர்க்கப்பட்டன. இறப்பு, நீக்கம் தொடர்பாக 31,350 படிவங்கள் பெறப்பட்டு 30,760 பேர் நீக்கப்பட்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும். இந்த பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார். இதில் ஆர்டிஓ தவசெல்வம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்ரீதா, தேர்தல் தாசில்தார் முத்துசாமி, திமுக மாநகர செயலாளர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டம் ஜெயக்குமார், திருவெறும்பூர் ராவணன், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், இந்திய கம்யூனிஸ்ட், பாஜ உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories: