நைனாமலை பெருமாள் கோயிலுக்கு ₹13 கோடியில் மலைப்பாைத வசதி

சேந்தமங்கலம், ஜன. 3: நைனாமலை பெருமாள் கோயிலுக்கு ₹13 கோடியில், மலைப்பாைத வசதி ஏற்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம் மின்னாம்பள்ளியில், நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயர மலையின் உச்சியில் உள்ள இக்கோயிலுக்கு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 3600 ஆயிரம் படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். இதனால் மலைச்சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், சுற்றுலாத் துறை சார்பில் ₹13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று நைனாமலை கோயிலுக்கு மேலே செல்லும் மலை சாலை அமைக்கப்படும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், விரைவில் மலைச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து பாத மண்டபத்திலுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்பி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயாசிங், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி, எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, முன்னாள் எம்பி சுந்தரம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், கௌதம், துரைராமசாமி, செந்தில்முருகன், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி வெங்கடாஜலம் துணைத் தலைவர் ராம்குமார், பேரூர் செயலாளர் நடேசன் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சந்திரசேகர் உதவி பொறியாளர் பிரனேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

ராசிபுரம்,: ராசிபுரத்தில் உள்ள பொன் வரதராஜ பெருமாள், கைலாசநாதர் உள்ளிட்ட கோயில்களில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்பி, முன்னாள் எம்பி சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, வெண்ணந்தூர் ஒன்றிய திமுக பொறுப்பாளர் துரைசாமி, ராசிபுரம் நகர செயலாளர் சங்கர் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். முன்னதாக சுவாமி தரிசனம் செய்த அமைச்சர், கோயில் வளாகம், தெப்பக்குளம் மற்றும் சிவன் கோயில் பகுதியில் நடைபெற்று வரும் மண்டப பணிகளை ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் விபரம் கேட்டறிந்தார். தொடர்ந்து அத்தனூர் அம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டு அங்கு உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

பெருமாள் கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், ராஜகோபுரம் கட்ட ஆரம்பித்த காலம் மற்றும் கோயில் வரலாறு உள்ளிட்டவற்றை செயல் அலுவலரிடம் கேட்டபோது, செயல் அலுவலர் பதில் அளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்றார். அதிகாரியின் நிலையைப் புரிந்துகொண்ட அமைச்சர், இதற்கு மேல் உங்களிடம் கேள்வி கேட்டால், உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போய் விடும் எனக்கூறி விட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

Related Stories: