எர்ணாபுரம் பஸ் ஸ்டாப்பில் தகராறு

நாமக்கல், ஜன.3: நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோட்டிற்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. சில பஸ்கள் எர்ணாபுரம் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்கிறது. நேற்று இரவு 7 மணியளவில் நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடுக்கு ஒரு தனியார் பஸ் சென்றது. அதில் பயணம்  செய்த ஒரு பெண், எர்ணாபுரத்துக்கு கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டார். அதற்கு அவர், எர்ணாபுரத்தில் பஸ் நிற்காது என கூறியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் பஸ்சில் இருந்தபடி போனில் தனது குடும்பத்தினரிடம் இது பற்றி பேசியுள்ளார். இதையடுத்து எர்ணாபுரம் பஸ் நிறுத்தம் வந்த அந்த பெண்ணின் உறவினர்கள், டூவீலர்களை சாலையின் குறுக்கே நிறுத்தி தனியார் பஸ்சை நிறுத்தி பஸ் டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இனி எர்ணாபுரத்தில் பஸ்சை நிறுத்துவதாக டிரைவர் கூறியதை தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

Related Stories: