பர்கூர் அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

கிருஷ்ணகிரி, ஜன.3: பர்கூர் அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமினை மதியழகன் எம்எல்ஏ., துவக்கி வைத்தார். பர்கூர் பேரூராட்சிக்குட்பட்ட கோதியழனூர் கிராமத்தில், திமுகவில் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்கும் முகாம் நடந்தது. பர்கூர் மதியழகன் எம்எல்ஏ தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சி தொடர, திமுகவில் இளைஞர்கள இணைய வேண்டும்,’ என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் சங்கர், வெங்கட்டப்பன், சிவகார்த்திக், தியாகராஜன், லோகேஷ், அஜீத், ஆனந்தபாபு, வேலன், பூர்ணிமா, சுகுணா, நரசிம்மன், ரவி, ராஜகோபால், சுப்பிரமணி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த முகாமில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர்.

Related Stories: