விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள்

கிருஷ்ணகிரி, ஜன.3: கிருஷ்ணகிரியில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அத்திமுகம் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். சூளகிரி அருகே உள்ள அத்திமுகம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண்மை பயின்று வரும் மாணவிகள் அபிதா, அஞ்சிமா, ஷாஜூ, பாரதி, தேவதர்ஷினி, தேவ்சேனா, ஹரிணிஜெயா, ஆஜிரா, இந்திராணி, ஜீவிதா, வர்ஷா மற்றும் வெண்மதி ஆகிய 11 பேர் கிருஷ்ணகிரி அடுத்த மலைசந்து கிராமத்தில் பட்டறிவு பயணமாக 75 நாட்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

இம் மாணவிகள், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, விவசாயிகள் தங்கள் குறைகளை எவ்வாறு தெரிவிக்கின்றனர், அதற்கு அதிகாரிகள் அளிக்கும் விளக்கம் குறித்து தெரிந்து கொண்டனர். பின்னர், இம்மாணவிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துணை இயக்குநர்கள் கிருஷ்ணன், சண்முகம் ஆகியோர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் குறித்து விளக்கம் அளித்தனர்.

Related Stories: