×

குடும்பத் தகராறில் போலீஸ்காரர் தற்கொலை

போச்சம்பள்ளி, ஜன.3: கிருஷ்ணகிரி அருகே குடும்பத் தகராறில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மாவட்டம், பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி(28). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், கடந்த 2017ம் ஆண்டு 7ம் நிலை பட்டாலியனில் காவலராக பணியில் சேர்ந்தார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு, பழனிசாமி சாப்பிட்டு விட்டு தூங்கச்சென்றுள்ளார். நேற்று காலை திவ்யா எழுந்து பார்த்தபோது, பழனிசாமி மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு கதறி துடித்தார். இதுகுறித்த தகவலின்பேரில், மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிசாமி உடலை மீட்டனர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறில் மனம் உடைந்த பழனிசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் 47.4 மி.மீ மழை