×

ஓசூர் ஐடிஐயில் குறுகிய கால தையல் பயிற்சி

கிருஷ்ணகிரி, ஜன.3: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  ஓசூர் அரசு ஐடிஐயில் தையல் மற்றும் பின்னலாடை குறுகிய கால பயற்சி தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் மகளிர் அதிகளவில் பயனடையலாம். காலியாக உள்ள 40 இடங்களுக்கு சேர்க்கை நடைபெறவுள்ளது. இதில் சேர விரும்புவோர், 18 வயதிலிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பள்ளிப்படிப்பு முடித்த, பாதியில் நிறுத்தியவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள், மகளிர் உள்ளிட்ட அனைவரும் பயன் பெறலாம். அனைவருக்கும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். மூன்று மாத கால பயிற்சி முடித்தவுடன் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.

பயிற்சியின் முடிவில் தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படும். குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ₹50 மற்றும் சேர்க்கை கட்டணம் ₹100 ஆகும். விருப்பமுள்ளவர்கள் தங்களது அசல் மற்றும் நகல்  கல்விச்சான்றிதழ்களுடன், ஓசூர் அரசினர் ஐடிஐ துணை இயக்குனரை நேரில் அணுகலாம். மேலும், விவரங்களுக்கு 04344 262457 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Hosur ITI ,
× RELATED ஓசூர் ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு