வரத்து அதிகரிப்பால் மொச்சை விலை சரிவு

தர்மபுரி, ஜன.3: தர்மபுரி மாவட்டம் முழுவதும், மொச்சை அவரை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பொங்கல் சீசன் என்பதால், இதன் விலை அதிகரிக்கும் என, விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். கடந்தாண்டு வரத்து குறைவால், மொச்சை அவரை கிலோ ₹80க்கு விற்பனையானது. ஆனால், இந்தாண்டு தர்மபுரி மாவட்டம் முழுவதும், சராசரி மழையை விட கூடுதலாக பெய்தது. இதனால், விவசாயிகள் மொச்சை அவரை, நெல், சோளம் உள்ளிட்டவற்றை அதிகளவில் சாகுபடி செய்தனர். விளைச்சல் அதிகரித்ததால், தற்போது சந்தைக்கு மொச்சை அவரை வரத்தும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மொச்சை ஒரு கிலோ ₹50க்கு விற்பனையானது. ஆனால் வரத்து அதிகரிப்பால், தர்மபுரி உழவர் சந்தையில் இதன் விலை கிலோ ₹30ஆக சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் சரியான விலை கிடைக்காமல் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: