வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை

தர்மபுரி, ஜன.3: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை உள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூர் வீட்டு வசதி பிரிவு, ஒசூர் திட்டப்பகுதி 7ல் கட்டி முடிக்கப்பட்டு, விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள குறைந்த வருவாய், பொருளாதாரத்தில் நலிவுற்றோர் பிரிவு மற்றும் திட்டப்பகுதி-16ல் மத்திய மற்றும் உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு காலி விபர அறிக்கை www.tnhb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: