மாவட்டம் முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்

தர்மபுரி, ஜன.3: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி எஸ்வி ரோடு அபயஆஞ்சநேயருக்கு, அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி ஹரிஹரநாத சுவாமி தெருவில் உள்ள தாஸ ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில், சுவாமிக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.

தொப்பூர் கணவாயில் உள்ள மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோயிலில், சுவாமிக்கு 10,008 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர் கோயில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி வீரதீர விவேக ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிஷேகம், வெண்ணைக்காப்பு, வெற்றிலை மாலை, செந்தூர அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

காரிமங்கலம் அடுத்த பூலாபட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில், அக்ரகாரம் ராமர் கோயில், பாலக்கோடு ரோடு ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோயில், காட்டு சீகலஹள்ளி ஆஞ்சநேயர் கோயில், குண்டுகல்லூர் ஆஞ்சநேயர் கோயில், கடத்தூர் அருகே தென்கரைக்கோட்டை கல்யாணராமர் நஞ்சுண்டேஸ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வீர சஞ்சீவராய ஆஞ்சநேயர் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அரூர்: அரூர் சந்தைமேட்டில் உள்ள அனுகிரக ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல், வாணீஸ்வரர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர், கன்னிகா பரமேஸ்வரி கோயில் அருகேயுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அனுமன்தீர்த்தம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோயில், இண்டூர் சாலையில் உள்ள ஆலமர ஆஞ்சநேயர் கோயில், பென்னாகரம் சாலையில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல், சோகத்தூர் ஆட்டுக்காரன்பட்டி ராமர் வளாகத்தில் உள்ள 300 ஆண்டு பழமையான ஜெய் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: