×

ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

திருப்பூர், ஜன.3:  திருப்பூர்-சபாபதிபுரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு மங்கள இசை, சீதாராம ஆஞ்சநேய சாமிக்கு சிறப்பு மகா கலச அபிஷேகம், காலை 9 மணிக்கு தீபாராதனை நடந்தது.
மேலும், ஆஞ்சநேய சாமிக்கு பால், தயிர், இளநீர், பாதாம், பிஸ்தா, தேன், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

உடுமலை: உடுமலை குட்டைத்திடலில் உள்ள ஸ்ரீசித்திபுத்தி விநாயகர் கோயிலில் அனுமன் ஜெயந்தி மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு, ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயருக்கு நேற்று வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். இதேபோல், பள்ளபாளையத்தில் உள்ள உடுமலை திருப்பதி கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் உள்ள சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோயிலில் சங்கல்பம், ஆவாஹன பூஜை, ஹோமம், அபிசேகம் ஆகியவை நடந்தன. பெருமாளுக்கும், ஆஞ்சநேயருக்கும் நெய் அபிஷேக பூஜை நடந்தது.

உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் வடமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நெல்லுக்கடை வீதி சவுந்திர ரராஜ பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் வடமாலை சாத்தப்பட்டது. எலையமுத்தூர் ரோடு, புவன கணபதி கோயிலில் ஆஞ்ச நேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஜல்லிப்பட்டி கரட்டுப்பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரமும், வடைமலை சாற்றியும் சிறப்பு பூஜை நடந்தது.

மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஜன.3: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் பாதுகாப்பு அமைப்பு தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார்.  காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஈஸ்வரன். இந்திய கம்யூ.,  நிர்வாகி மோகன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலிக். தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் கனகசபாபதி, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கண்டித்தும், போக்சோ குற்றங்களுக்கு தண்டணை கடுமையாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags : Hanuman Jayanti Festival ,Anjaneyar Temple ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி