ஆதிவாசி மக்களுக்கு தரமற்ற தொகுப்பு வீடுகள் கட்டுவதாக புகார்

பந்தலூர், ஜன. 3: பந்தலூர் அருகே அய்யன்கொல்லி அருகே முருக்கம்பாடி பகுதியில் சேரங்கோடு ஊராட்சி சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பில் 5 தொகுப்பு வீடுகள் ஆதிவாசி மக்களுக்கு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி வருவாய்துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் தொடர்பாக தாசில்தார் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவிப்பதாக தெரிவித்தார்.

Related Stories: