பழங்குடியின கிராமங்களில் குறைதீர் முகாம்

ஊட்டி, ஜன. 3: தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கேரளா, கர்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ளது. கேரள எல்லையோர வனப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. நீலகிரிக்குள் மாவோயிஸ்ட்கள் நுழையாதபடி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லையோர பழங்குடியின கிராமங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக மஞ்சூர் அருகே பெள்ளத்திகம்பை, தும்பனேரிகொம்பை, கொலக்கொம்பை அருகே சடையன்கொம்பை, மேல்குரங்குமேடு, கீழ்குரங்குமேடு ஆகிய கிராமங்களில் குறைதீர் முகாம் நடந்தது.

மேலும் கோத்தகிரி அருகே செம்மனாரை, தாளமொக்கை, மசினகுடி அருகே ஆனைபாடி, தேவர்சோலை அருகே கர்காபாளி, முக்கூர், ஆலவயல், வேர்கடவு, நெலாக்கோட்ைட அருகே போர்டுகாலனி, குழிமூலா மற்றும் விளங்கூர் ஆகிய கிராமங்களிலும் முகாம் நடந்தது. இதில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்று பழங்குடியின மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 135 மனுக்கள் பெறப்பட்டன.

Related Stories: