மரம் முறிந்து விழுந்து காவலாளி பலி

ஈரோடு, ஜன. 3: திருப்பத்தூர் மாவட்டம் கண்டவராயன்பட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி(58). இவர் ஈரோடு வைராபாளையம் நாட்ராயன்  கோவில் வீதியில் சாயப்பட்டறை உரிமையாளருக்கு சொந்தமான காலி இடத்தை பராமரித்து, அங்கேயே தங்கி காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. இதைத்தொடர்ந்து, கருப்புசாமி நேற்று முன்தினம் மாலை அவர் தங்கியிருக்கும் அறைக்கு வெளியே காலி இடத்தில் பாத்திரம் கழுவி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவருக்கு அருகே இருந்த முள் முருங்கை மரம் திடீரென முறிந்து, பாத்திரம் கழுவி கொண்டிருந்த கருப்புசாமி மீது விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே கருப்புசாமி உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் யாரும் இல்லாததால் கருப்புசாமி மீது மரம் விழுந்தது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில், நேற்று காலை அங்கு வந்த இட உரிமையாளர், கருப்புசாமியை தேடிப்பார்த்தபோது, மரம் முறிந்து கிடப்பதும், அதற்கு கீழ் கருப்புசாமி இறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஈரோடு தீயணைப்பு துறைக்கும், கருங்கல்பாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். இதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி, கருப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: