அதிமுக ஆட்சியில் தரமற்ற பணியால் ஜல்லி பெயர்ந்த தார்ச்சாலை புதிய தார்ச்சாலை அமைக்க கோரிக்கை

சின்னாளபட்டி, ஜன. 1: ஆத்தூர் அருகே, பாளையங்கோட்டை ஊராட்சியில், அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலை தரமற்ற பணியால் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாளையங்கோட்டை ஊராட்சியில் பாளையங்கோட்டை, காமன்பட்டி, கூலம்பட்டி, பிரவான்பட்டி, தேவனூர், லட்சுமிபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைக்கப்பட்ட செம்பட்டி-தேனி சாலையிலிருந்து பாளையங்கோட்டை ஊராட்சிக்கு வரும் வடக்குப்புற சாலை அமைக்கப்பட்டது. ஆனால், தரமற்ற பணியால் தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.

 மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, புதிய தார்ச்சாலை அமைக்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஒன்றியகுழு உறுப்பினர் பாப்பாத்தி கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வடக்குப்புறமாக பாளையங்கோட்டைக்கு வரும் தார்ச்சாலை, அதிமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. அப்போது தரமற்ற பணியால் தார்ச்சாலை மண் சாலையாக மாறி வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: