ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரும்புச் சோள அறுவடை விறுவிறு அரிசியை விட பல மடங்கு சத்து அதிகம்

சின்னாளபட்டி, ஜன. 1: திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளம், வெள்ளைச்சோளம் மற்றும் சிவப்புச்சோளம் எனப்படும் இரும்புச் (இருங்கு) சோளப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டி வருகின்றனர். இரும்புச் சோளத்தை 30 வருடங்களுக்கு முன்பு கிராமப்புற மக்கள் உணவாக பயன்படுத்தி வந்தனர். அவற்றின் தவிட்டை மாடுகளுக்கு தீவனமாக கொடுத்து வந்தனர். அதன்பின் இரும்புச் சோளத்தின் பயன்பாடு குறைந்தது. ஆனால், கடந்த 4, 5 ஆண்டுகளாக கிராமங்களில் விவசாயிகள் இரும்பு சோளப்பயிர்களை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.மேலும் தற்போது இயற்கை உணவில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் சோளப்பயிர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. சோளம் அரிசியைப் விட பல மடங்கு சத்துக்களை கொண்ட ஒரு உணவுப் பொருளாக உள்ளது, தற்போது ஆத்தூர் ஒன்றியம் பிரவான்பட்டியில் பயிரிடப்பட்டிருந்த இரும்புச்சோளப்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: