கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

நத்தம், ஜன. 1: நத்தம் அருகே புன்னப்பட்டி ஊராட்சி காட்டுவேலம்பட்டி, வீரப்பநாயக்கன்பட்டி பகுதிகளில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கால்நடை டாக்டர் முருகானந்தம் தலைமையில் கால்நடை ஆய்வாளர் மாரிமுத்து, உதவியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில், அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது கறவைப் பசு, காளைகள் மற்றும் கன்றுகளுக்கு சுமார் 150க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை புன்னப்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கால்நடைத்துறையினர் செய்திருந்தனர்.

Related Stories: