மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் திட்டம்

ஈரோடு, ஜன.1: ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் கிருஷ்ணராஜ் கூறியதாவது: ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அதன் வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்டு மாற்றுத்திறன் சக்தியுள்ள பயனாளிகளுக்கு தொழில், வியாபாரம் காரியத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை நபர் ஜாமீனின் பேரிலும், ரூ.20 லட்சம் வரை சொத்து அடமானத்தின் பேரிலும் மிக குறைவான வட்டியில் வழங்கப்படுகிறது.

ஜாமீன் பேரில் ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற பயனாளிகள் ஆதார் நகல், பான்கார்டு நகல், மாற்றுத்திறனாளி புத்தக நகல், பாஸ்போர்ட் போட்டோ, தொழில் செய்யும் புகைப்படம் மற்றும் உரிய ஆவணங்களுடனும் ரூ.20 லட்சம் வரை வீடு அடமானத்தின் பேரில் கடன் பெற வீட்டு கிரய பத்திரம், மூலப்பத்திரம், பொறியாளர் மதிப்பீடு, கடன் திட்ட மதிப்பீடு, வில்லங்க சான்று பட்டா மாறுதல் உத்திரவு முதலிய ஆவணங்களுடன் ஈரோடு மாவட்ட வங்கி கிளைகள் மற்றும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை நேரில் அணுகி கடன் பெற்றுக்கொள்ளலாம்.

Related Stories: