5 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டாஸ் பாய்ந்தது

நாமக்கல், டிச. 28: நாமக்கல் நல்லிபாளையம் போலீசார், கடந்த மாதம் குமாரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன், கந்தம்பாளையத்தை சேர்ந்த விஜயவீரன், மணியனூரை சேர்ந்த ராணி, ஈரோட்டை சேர்ந்த ஆனந்தி, ராஜி ஆகிய 5 கஞ்சா வியாபாரிகளை கைது செய்தனர். இவர்கள் சட்டவிரோத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, நாமக்கல் மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாகூர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரேயா சிங் கஞ்சா வியாபாரிகள் 5 பேரையும், குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: