மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுவரை 1.12 லட்சம் பேருக்கு சிகிச்சை அமைச்சர் மதிவேந்தன் தகவல்

நாமக்கல், டிச. 28: நாமக்கல் மாவட்டத்தில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1.12 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நாமக்கல்லில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது. ராமலிங்கம் எம்எல்ஏ முன்னிலை வகித்து பேசினர். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர்  கலந்துகொண்டு, மொத்தம் 405 பயனாளிகளுக்கு ₹86.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை

வழங்கினர்.

அப்போது அமைச்சர் பேசுகையில், ‘தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி வருவதோடு, புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ், மொத்தம் 1,12,893 பேருக்கு தொடர் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சாலை விபத்துகளால் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதற்காக, இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48  திட்டத்தை தொடங்கி, செயல்படுத்தி வருகிறார்,’ என்றார்.

நிகழ்ச்சியில், ஆர்டிஓ மஞ்சுளா, பிஆர்ஓ சீனிவாசன், தாசில்தார் தமிழ்மணி, நகராட்சி பொறியாளர் சுகுமார், திமுக நகர பொறுப்பாளர்கள் பூபதி, ராணா. ஆனந்த், மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஈஸ்வரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நந்தகுமார், இளம்பரிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: