வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறிய மாஜி வீரர்களுக்கு சலுகை

கிருஷ்ணகிரி, டிச.28: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து, புதுப்பிக்க தவறிய முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் 2014, 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து, புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சலுகை மற்றும் 2017, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க தவறிய கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: