மாவட்டத்தில் நடப்பாண்டு ₹195 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம்

கிருஷ்ணகிரி, டிச.28:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தகுதியுள்ள அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. பயிர்க்கடனாக தனி நபர் பிணையத்தின் பேரில் ₹1.60 லட்சம் வரையிலும், அடமானத்தின் அடிப்படையில் ₹3 லட்சம் வரையில் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளது தேதி வரை 18,957 விவசாய உறுப்பினர்களுக்கு ₹121.99 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிர்க்கடன் வழங்க ஆண்டு குறியீடாக ₹1.95 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர் கடன் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

எனவே விவசாயிகள் நில உடமை சிட்டா, அடங்கல், ஆதார் நகல், ரேஷன் கார்டு,  பான் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை அளித்து உறுப்பினராக சேர்ந்து வட்டியில்லா பயிர் கடன் பெற்று பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: