குட்கா விற்பனை செய்த 34 கடைக்காரர்கள் கைது 45 கிலோ பறிமுதல்

கிருஷ்ணகிரி, டிச.28:  கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில், போலீசார் நேற்று முன்தினம் பெட்டி மற்றும் மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பர்கூர் எமக்கல்நத்தம் மூர்த்தி (37), ஓசூர் மொரனப்பள்ளி நாராயணப்பா, வேப்பனஹள்ளி கதிரிப்பள்ளி மாரியப்பா (44), வேப்பனஹள்ளி எகுடதம்பள்ளி கலித் (21), உத்தனப்பள்ளி நாகராஜ் (64), பேரிகை மணி (52), போச்சம்பள்ளி தீர்த்தகிரி வலசை பாலையா (62), மகாராஜாகடை சாம்பசிவம், முனீஸ்குமார் என மாவட்டம் முழுவதும் 34 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹4,500 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் கிருஷ்ணகிரி டவுன் எஸ்ஐ சிவசந்தர் மற்றும் போலீசார், புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு கேட்பாரற்று கிடந்த பையை போலீசார் கைப்பற்றி பார்த்தபோது, அதில் 45 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. இதையடுத்து ₹32,100 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அதனை வீசிச்சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: