கொரோனாவால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ₹25 லட்சம் நிவாரணம்

தர்மபுரி, டிச.28: கொரோனாவால் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்கு ₹25 லட்சம் நிவாரண உதவியை எஸ்பி.கலைச்செல்வன் வழங்கினார். அரூர் உட்கோட்டம் ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த விஜயகுமார், கடந்த மே 25ம் தேதி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ₹25லட்சத்திற்கான காசோலையை, அவரது மனைவி ஜீவாவிடம் மாவட்ட எஸ்பி.கலைச்செல்வன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: