இல்லம் தேடி கல்வி திட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.9: பாப்பிரெட்டிப்பட்டி அருகே அண்ணாநகர், மோளையானூர், பூனையானூர், தேவராஜபாளையம் ஆகிய அரசு தொடக்க பள்ளிகளில், பள்ளி கல்வித்துறை சார்பில், இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பிரசார கலைநிகழ்ச்சி, வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன், ஜான் பெலிக்ஸ் சேகர், ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.வட்டார வள மைய மேற்பார்வையாளர் எழிலரசி, பள்ளி தலைமையாசிரியர்கள் மங்கையர் கரசி, தாமரைசெல்வி, சுந்தர்ராஜன், சித்ரா ஆகியோர் கலைநிகழ்ச்சி மூலமும், நாடகம் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தன்னார்வலர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து

கொண்டனர்.

Related Stories:

More