736 பயனாளிகளுக்கு ₹83.76 லட்சம் நலஉதவிகள்

சேந்தமங்கலம், டிச.9: சேந்தமங்கலம் தாலுகா எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார். இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு, 736 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் வீட்டுமனை பட்டா மாறுதல், குடும்ப அட்டை என ₹83.76 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ‘கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 3 பேரூராட்சிகளிலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு, அதில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைத்துள்ள அரசு, மக்கள் பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே நீங்கள் எப்போதும் முதல்வருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசுக்கு ஆதரவாக நீங்கள் இருந்தால் தான், அதிக அளவிலான நலத்திட்ட உதவிகளை உங்களுக்கு வந்தடையும்,’ என்றார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ கதிரேசன், ஆர்டிஓக்கள் மஞ்சுளா, இளவரசி, ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், பாலசுப்பிரமணியம், பேரூர் செயலாளர்கள் நடேசன், தனபாலன், பழனியாண்டி, தாசில்தார் சுரேஷ், சமூக நல தாசில்தார் ரகுநாதன், ஒன்றியக்குழு தலைவர் மணிமாலா சின்னசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிர்வேல், தகவல்தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத், மாவட்ட துணை செயலாளர் விமலா சிவக்குமார், பவித்திரம் கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: