ரங்கம் கோயிலில் தரிசனம், பல்கலை. பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்பு திருச்சி தொழில் முதலீட்டு கழகத்தில் சிறப்பு தொழில் கடன் மேளா துவக்கம்

திருச்சி, டிச.9: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம், மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் ஏற்கனவே இயங்கி வரும் தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியைப் பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. திருச்சி தொழில் முதலீட்டு கழக கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா நேற்று துவங்கியது. இந்த மேளா வரும் 15ம் தேதி வரை (சனி, ஞாயிறு நீங்கலாக) நடைபெறவுள்ளது.இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (25 சதவிகித மூலதன மானியம், 6 சதவிகித வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகித முதலீட்டு மானியம் அதிகபட்சம் ரூ.1.50 கோடி வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொதுக் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவிகித சலுகை அளிக்கப்படும். திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அரியவாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0431-2460498, 4030028 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார் திருச்சி, டிச.9: ஆண்டு தோறும் டிச.5ம் தேதி ‘உலக மண் தினம் நாள்’ கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கல்லூரியான அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் தோட்டக்கலை கல்லூரி வளாகத்தில், உலக மண் தினம் கொண்டாடப்பட்டது. மண்ணியல் துறைத் தலைவர் பாலசுப்ரமணியம் வரவேற்றார். இதில் தோட்டக்கலைக் கல்லூரி முதல்வர் பரமகுரு, பேராசியர் பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

வேளாண் கல்லூரி முதல்வர் மாசிலாமணி கூறுகையில், தமிழகத்தில் கணிசமான அளவிலுள்ள விளை நிலங்கள் களர்-உவர்த்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் சராசரியாக 6 சதவீத நிலப்பரப்பு உவர்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. முறையற்ற நீர்பாசனம், சரியான வடிகால் வசதி இல்லாத இடங்கள் மற்றும் அதிகளவு ரசாயன உரங்கள் பயன்படுத்துவதாலும் மண்ணில் உவர் தன்மை அதிகரிக்கிறது. இவ்வாறு ஏற்படக்கூடிய உவர்தன்மையை குறைப்பதற்கு பல்வேறு வழிகளையும் எடுத்து கூறினார்.இயற்கை உரங்கள் மற்றும் நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்துவது, பசுந்தாள் மற்றும் மக்கிய உரங்களை மண்ணில் இடுவதன் மூலம் கணிசமான அளவில் உவர் தன்மையை குறைக்க முடியும் என்றார்.மேலும், வினாடி வினா, கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் மற்றும் மண்ணைப் பயன்படுத்தி வண்ண கோலம் போடுதல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வேளாண் கல்லூரி முதல்வர் மாசிலாமணி பரிசு வழங்கினார். பேராசிரியர் அருள்மொழியான் நன்றி கூறினார்.

Related Stories: