பழப்பயிர் நாற்றுகள் உற்பத்தி பயிற்சி

பெரியகுளம், டிச.9: பெரியகுளம் தோட்டக்கலை தொழில் மேம்பாட்டு மையம் மற்றும் பழ அறிவியல் துறை சார்பில் உயர்தர பழப்பயிர் நாற்றுகள் உற்பத்தி மற்றும் பராமரிப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் வருகிற 14ம் தேதி காலை 9 மணி துவங்கி நடக்க உள்ளது. விவசாயத்தின் மீது பெருகி வரும் ஆர்வம் காரணமாக, பலரும் குறைந்த பராமரிப்புள்ள பழப்பயிர் பண்ணைகளை அமைத்து வருகிறார்கள். தொடர்ந்து அதிகரிக்கும் இந்த தேவைக்கேற்ப, தரமான பழப்பயிர் நாற்றுகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, புதிய தொழில்முனைவோர்களை இந்த துறையில் உருவாக்குவதற்கான முயற்சியாக இந்த பயிற்சி நடைபெறுகிறது. எனவே இந்த பயிற்சியை விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர்.

ஆறுமுகம் கேட்டுக் கொண்டுள்ளார். பயிற்சிக் கட்டணம் ரூ.500. முன்பதிவிற்கு www.ediiphbif.org என்ற இணையதள முகவரியில் பதிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: