தாந்தோணிமலை கோயில் தெப்பக்குளத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கும் அவலம்

கரூர், டிச. 9: கரூர் தாந்தோணிமலை வெங்கட்ரமண சுவாமி கோயில் முன்புறம் உள்ள தெப்பக்குளத்தை தூர்வார தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் தாந்தோணிமலையில் தென் திருப்பதி என அழைக்கப்படும் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் சனிக்கிழமை நாட்களிலும், மாசி மகத்தேரோட்டம் மற்றும் புரட்டாசி பெருந்திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், கோயில் முன்புறம் உள்ள தெப்பக்குளத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் குளம் தூர்வாரப் படாத காரணத்தினால் பாசனம் படிந்த நிலையில் உள்ளது. எனவே பக்தர்கள் உட்பட அனைத்து தரப்பினர்களின் நலன் கருதி இதனை தூர்வார தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: