கல்லூரி மாணவி தற்கொலை

வேடசந்தூர், டிச. 8: வேடசந்தூர் ஆத்துமேடு காஜா நகரை சேர்ந்த பாக்கியநாதன் மகள் ஜெரின கேத்தரின். கல்லூரி மாணவி. இவர் நேற்று கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்கு சென்று விட, வீட்டில் தனியாக இருந்த ஜெரின கேத்தரின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதிய உணவிற்கு தந்தை வீட்டிற்கு வந்தபோது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த வேடசந்தூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More