காவல் தேர்வர்களின் கைரேகை பதிவு

மதுரை, டிச. 8: மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன் காவலர் தேர்வு நடந்தது. இதில் மதுரை மாநகரில் நடந்த தேர்வில் 202 பேரும், மாவட்டத்தில் 500 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். போலீஸ் வேலைக்கு தேர்வான இவர்களில், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் உள்ளனரா? என்பது குறித்து, தேர்வானவர்கள் வசிக்கும் இடத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வானவர்களிள் கைரேகை பதிவு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தற்போது நடந்து வருகிறது. மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்த இந்த நிகழ்வில் உயர் அதிகாரிகள் தலைமையில் கைரேகை துறை நிபுணர்கள், தேர்வர்களின் கைரேகைகளை பதிவெடுத்தனர். கல்விச்சான்றுகளும் பரிசோதனை செய்யப்பட்டது. இப்பணி இன்றும் நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More