அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லூர்/ வாடிப்பட்டி, டிச. 8: அதிமுக இணைய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்ற கார் மீது அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் செருப்பு வீசியதை கண்டித்து நேற்று அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் அலங்காநல்லூர் கேட்டு கடை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அமமுக நிர்வாகிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன். முருகேசன். நகர செயலாளர் அழகுராஜ்..அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் சுந்தர்ராஜன், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி உமேஷ்சந்தர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

*வாடிப்பட்டியில் உள்ள அண்ணா சிலை முன்பாக அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஒன்றிய செயலாளர் காளிதாஸ் உட்பட இருபது பேர் மீது வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories:

More