மது பாட்டில், பான்மசாலா பறிமுதல் 4 பேர் கைது

மேலூர், டிச. 8: மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 2 பேர் மற்றும் பான்மசாலா விற்பனை செய்த 2 பேர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டு, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலூர் அருகே நயித்தான்பட்டியில் வீட்டின் அருகே மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்த, முத்தையா மகன் செல்லமுத்து(55), கீழவளவு உள்ள டீக்கடையில் மது விற்பனை செய்த மழுவேந்தி மகன் சேவற்கொடியோன்(45) ஆகியோரை கைது செய்த கீழவளவு போலீசார் இவர்களிடமிருந்து 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதே போல் மேலூர் டிஎஸ்பி பிரபாகரன் உத்தரவுபடி கீழவளவு இன்ஸ்பெக்டர் கருப்பச்சாமி, நாயித்தான்பட்டியில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனையிட்டார். அங்கு தடை செய்யப்பட்ட பான்மசாலா, புகையிலை பொருட்கள் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ளவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நாயித்தான்பட்டி சேர்ந்த முத்துகண்ணன், முருகன்பட்டியை சேர்ந்த பாலமுருகன் ஆகியோரை கீழவளவு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More