மண் எடுக்க அனுமதி கோரி மனு

மதுரை, டிச. 8: மதுரை மாவட்ட சேடபட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜாசங்கர் தலைமையில், இந்த அமைப்பினர், நேற்று கலெக்டர் அனீஷ்சேகரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், ‘மாவட்டத்தில் எழுமலை, வண்டாரி, மல்லபுரம், சூலப்புரம், துள்ளக்குட்டிநாயக்கனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 170க்கு மேற்பட்ட செங்கல் சூளை இயங்கி வருகின்றன. கடந்த ஒராண்டாக செம்மண், கரம்பை மண் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. சூளைகள் செயல்படாமல் உள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள 6 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி, வருமானம் இன்றி தவிக்கின்றனர். வெளியே இருந்து மண் அள்ளினால், செலவு அதிகமாகும். எங்கள் பகுதியில் 10 குவாரிகள் உள்ளது. இதில் இருந்து மண் அள்ள அனுமதிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.இதுதொடர்பாக கனிமவளத்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.

Related Stories:

More