பேரூராட்சி அறிவிப்பு அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட கலெக்டர்

பரமக்குடி,டிச.8: பரமக்குடி பஸ் நிலையம் பகுதியில் கலெக்டர் சங்கர்லால் குமாவத் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை பயன்பாடின்றி கிடந்தது. பயணிகள் பயணிக்கும் பாதை பகுதி ஆக்கிரமிப்புகளால் இருந்தது. இலவச கழிப்பறை மூடிக் கிடந்தது. பேருந்து நிலையம் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி துப்புரவு செய்யாமல் பராமரிப்பு இன்றி உள்ளதை பார்த்த கலெக்டர் சங்கர்லால் குமாவத், அதிருப்தி அடைந்தார். இதனால் நகராட்சி அதிகாரிகளுக்கு டோஸ் விட்டார்.     

மேலும் உடனடியாக இந்த குறைகளை நிவர்த்தி செய்து, பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.     முதியவரை கொன்ற மலைத்தேனீ கூட்டம்காரைக்குடி அருகே ஆயினிபட்டியில் மரத்தில் உள்ள மலைத்தேனீ. உள்படம்: உயிரிழந்த சோலை(பைல் படம்).   

Related Stories:

More