கண்டவராயன்பட்டி காவல்நிலையம் பின்புறம் சிக்கிய 10 அடி நீள மலைப்பாம்பு. கைத்தறி நெசவுக்கு ஜிஎஸ்டியை முழுமையாக நீக்க வேண்டும்

பரமக்குடி, டிச.8: பரமக்குடி எமனேஸ்வரம் அனைத்து கைத்தறி நெசவாளர் சொசைட்டிகளின் உறுப்பினர்களின் பெடரேஷன் நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் சேஷய்யா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் கோவிந்தன், நாகநாதன், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக செயலாளர் கோதண்டராமன் வரவேற்றார். கைத்தறி நெசவுக்கு மத்திய அரசு விதித்துள்ள 12% ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்டும். வரலாறு காணாத வகையில் கைத்தறி துணி உற்பத்தி செய்ய தேவைப்படும் பருத்தி நூல் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ள விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். பருத்தி நூல் விலை ஏற்றத்தை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக எமனேஸ்வரம் பகுதியில் அனைத்து நெசவாளர்கள் சங்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் நாகராஜன், குப்புசாமி, முரளி, ராஜன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கணேஷ்பாபு நன்றி கூறினார்.   

Related Stories: