திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

தேனி. டிச. 8: ஆண்டிபட்டியில் எம்.எல்.ஏ மகாராஜன் முன்னிலையில், மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்.   ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 4, 5வது வார்டுகளில் உள்ள மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், ஏற்கனவே, இருந்த கட்சிகளிலிருந்து விலகி, தொகுதி எம்எல்ஏ மகாராஜன் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி ஆண்டிபட்டியில் உள்ள திமுக எம்எல்ஏ மகாராஜன் அலுவலகத்தில் நடந்தது. இதில், ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ராஜாராம், முத்துராமன், சரவணன், ஆறுமுகம் மற்றும் பேரூர் கிளை ஒரு கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இலக்கிய விருதளிப்பு விழா

கம்பம், டிச. 8: கம்பத்தில், அன்றில் இலக்கியச் சுற்றத்தின் விருதளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் துணைத்தலைவர் ஆசிரியர் மாதவன் தலைமை வகித்தார். கோவை ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இணைச்செயலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். கவிஞர்கள் ரியாஸ், முத்தீஸ்வரன், நந்தகுமார் கவிதை வாசித்தனர். முனைவர் யாழ்ராகவன், சொரூபராணி ஆய்வுரையாற்றினர். உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா கல்லூரி பேராசிரியர் முகம்மது ரபீக் என்ற மானசீகன் பேசினார். தமுஎகச மதிப்புறு தலைவர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டது. இதையடுத்து ஏற்புரை நிகழ்த்தினார். இணைச்செயலாளர் வல்வெட்டித்துறை வடிவேல் நன்றி தெரிவித்தார். நிகழ்வை ஆசிரியர்கள் முத்துக்கண்ணன், சித்தேந்திரன், சுரேகா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Related Stories:

More