மயிலாடும்பாறை அருகே குழாய் உடைப்பால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் கிராம மக்கள் அவதி

வருசநாடு, டிச. 8: மயிலாடும்பாறை அருகே, கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள மூலக்கடை, முத்தாலம்பாறை, நரியூத்து உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு மயிலாடும்பாறை மூலவைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து, அங்கிருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மூலக்கடை அருகே குழாய் உடைப்பால், 3 ஊராட்சிகளில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை. இதனால், கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தோட்டங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும்டூவீலர், ஆட்டோ மூலம் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கூட்டுக்குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால், கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. எனவே, நிரந்தர தீர்வாக மயிலாடும்பாறை உறை கிணற்றில் இருந்து முத்தாபாலம்பாறை உள்ளிட்ட 3 ஊராட்சிகளுக்கும், புதிய குடிநீர் குழாய் பதிக்க வேண்டும். குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் நாட்களில், மாற்று ஏற்பாடாக கிராமங்களில் புதிய போர்வெல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை உள்ளனர்,சீரமைப்பு பணி தீவிரம்கடந்த இரண்டு நாட்களாக கூட்டுக்குடிநீர் திட்ட பணியாளர்கள் குழாய் உடைப்புகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட சிமெண்ட் குழாய் என்பதால், அவ்வப்போது உடைப்பு ஏற்படுகிறது. எனவே, புதிய குழாய் பதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.    

Related Stories:

More