தேனியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாடு

தேனி, டிச. 7: தேனி-அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட அறிவியல் இயக்க மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் மகேஸ் தலைமை வகித்தார். பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர் மோகனா துவக்கி பேசினார். மாவட்ட செயலாளர் தெய்வேந்திரன், பொருளாளர் மணிமேகலை ஆகியோர் பேசினர். மாநாட்டில் புதிய மாவட்ட தலைவராக செந்தில்குமரன், செயலாளராக வெங்கட்ராமன், பொருளாளராக பாலசுப்ரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட துணைத்தலைவர்களாக மகேஸ், கோபி, ஞானசுந்தரி, மாவட்ட இணைச்செயலாளர்களாக ஜெகநாதன், தெய்வேந்திரன், முத்துக்கண்ணன் என

நிர்வாக குழுவை உள்ளடக்கிய 40 பேர் கொண்ட மாவட்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாநில செயலாளர் சுந்தர், முத்துலட்சுமி, மாநில கருத்தாளர் பாண்டியராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் முத்துக்கண்ணன் எழுதிய ‘ரெட்இங்க்’ நூல் அறிமுகம் செய்யப்பட்டது. முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சதீஷ் நன்றி கூறினார்.

Related Stories: