அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் டிச.10 கடைசி நாள்

விருதுநகர், டிச. 8: விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தகவல்: வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது, குடியரசு தினவிழாவில் வழங்கப்படும். வீர,தீர செயல் புரிந்து உயிர்களை காப்பற்றிய தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். 2022க்கான பதக்கத்திற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் மற்றும் தொடர்பானஆவணங்களுடன் கலெக்டர் பரிந்துரையுடன் வழங்க வேண்டும். தகுதியானவர்கள் //awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள், விபரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க கடைசி நாள் 10.12.2021. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

More