பவானி அருகே மனைவியிடம் தகவல் தெரிவித்துவிட்டு விஷம் குடித்து பிழைத்த வாலிபர் சுரங்க நீர்வழிப் பாதையில் குதித்து தற்கொலை

பவானி, நவ 8: ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ளது குறிச்சி. இங்குள்ள செம்படாபாளையம், சோலையப்பன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் முருகேசன் (35). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி சுந்தராம்பாள் (30). கூலி தொழிலாளி.  இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். முருகேசனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. சம்பாதிக்கும் பணத்தை குடித்தே செலவு செய்து வந்தார். இதனால் சுந்தராம்பாள் குடும்பம் நடத்த சிரமப்பட்டார். முருகேசன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

கடந்த 26ம் தேதி அன்றும் வழக்கம்போல் முருகேசன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் விரக்தியடைந்த முருகேசன் வீட்டில் யாருக்கும் தெரியாமல் விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் பெரும் போராட்டத்திற்கு பின்னர் முருகேசன் உயிர் பிழைத்தார். பின்னர் சிகிச்சை முடிந்து கணவரை சந்தராம்பாள் வீட்டுக்கு அழைத்து வந்தார். மனைவி மற்றும் உறவினர்கள் முருகேசனுக்கு அறிவுரை வழங்கினர். ஒரு சில நாட்கள் முருகேசன் குடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வழக்கம்போல் முருகேசன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன்  தகராறில் ஈடுபட்டார். அப்போது எனக்கு வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி அவரை சமானப்படுத்தினார். இந்நிலையில் முருகேசன் தனது மொபட்டை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டார். வெளியே சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது மனைவி அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால் முருகேசனை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில், மேட்டூர் மேற்கு கரை வாய்க்காலில் குறிச்சி அருகே சுரங்க வழிப்பாதையின் ஓரத்தில் முருகேசனின் மொபட் இருந்தது. அதே பகுதியில் நேற்று காலை முருகேசனின் உடல் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இது குறித்து, அம்மாபேட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சுரங்க நீர்வழிப் பாதையில் முருகேசன் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Related Stories:

More